Categories
உலக செய்திகள்

சற்றும் எதிர்பாராத தருணம்…. அதிகளவு ஆழம் நிறைந்த ஏரி…. அதிஷ்டவசமாக உயிர் பிழைத்த நபர்கள்….!!

வியட்நாமில் அதிகளவு ஆழம் நிறைந்த ஏரியில் சென்ற படகு ஒன்று கவிழ்ந்ததில், அதிலிருந்த 3 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

வியட்நாம் நாட்டின் தெற்கே பூவை என்ற இடத்தில் அதிக அளவு ஆழம் நிறைந்த ஏரி ஒன்று அமைந்துள்ளது. இந்த ஏரியில் சுமார் 5 பேர் படகில் பயணம் செய்துள்ளார்கள். இந்நிலையில் திடீரென்று படகு ஏரியில் கவிழ்ந்ததில் அதிலிருந்த 5 பேரும் நீருக்குள் மூழ்கியுள்ளார்கள்.

ஆனால் அதில் 2 பேர் நீச்சலடித்து கறைக்கு சென்று தங்களுடைய உயிரை காப்பாற்றியுள்ளார்கள். இருப்பினும் படகில் பயணம் செய்த மற்ற 3 பேர் ஏரியில் மூழ்கி பரிதாபமாக உயிர் இழந்துள்ளார்கள். இவ்வாறு உயிரிழந்த 3 பேரின் உடல்கள் நீண்ட நேரமாக தேடப்பட்டு அதன்பின் கண்டறியப்பட்டுள்ளது.

Categories

Tech |