Categories
உலக செய்திகள்

என்ன…! இவரு இறந்துட்டாரா…? மும்பை சிறையில் அவதிப்பட்ட பாதிரியார்…. இரங்கலைத் தெரிவிக்கும் பிரபலங்கள்….!!

பழங்குடி மக்களுக்காக போராடிய மற்றும் பாதிரி யாராக பதவியேற்ற தேன் ஸ்வாமி மும்பை சிறையில் அடைக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது உடல்நலம் குறைவால் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சி மாவட்டத்தில் 1937 ஆம் ஆண்டு பிறந்த ஸ்டேன் சுவாமி 1957 ஆம் ஆண்டு துறவியாகியுள்ளார். அதன் பின்னர் 1970 ஆம் ஆண்டு பாதிரியாராக பதவியேற்றுள்ளார். இதனையடுத்து இவர் சுமார் 36 வருடம் ஜார்கண்ட் மாநிலத்திற்கு சென்று அங்குள்ள பழங்குடியின மக்களின் உரிமையை பெற்றுத் தருவதற்காக போராடியுள்ளார். இதனைத் தொடர்ந்து தேசிய புலனாய்வு அமைப்பு ஸ்டேன் சுவாமியை உபா வழக்கில் கைது செய்து மும்பை சிறையில் அடைத்துள்ளார்கள்.

இதற்கிடையே ஸ்டேன் சுவாமிக்கு நடுக்கவாத நோய் இருந்துள்ளது. இந்நிலையில் ஸ்டேன் சுவாமிக்கு மும்பை சிறையில் போதிய சிகிச்சை கிடைக்காததால் நடுக்க வாத நோயால் கடுமையாக அவதிப்பட்டுள்ளார். அவ்வாறு நோயால் அவதிப்பட்டு வந்த ஸ்டேன் சுவாமி சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ஆனால் அங்கு அவருக்கு மருத்துவர்கள் அளித்த சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இவருடைய மறைவுக்கு தமிழகம் மற்றும் கேரள முதல்வர் உட்பட பல தரப்பு கட்சியினரும் தங்களுடைய இரங்கலை தெரிவித்து வருகிறார்கள். மேலும் இவருடைய மறைவு மிகுந்த வேதனையை அளிப்பதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.

Categories

Tech |