சிறைக்குள் அடைக்கப்பட்டிருக்கும் கைதிகளுக்கிடையே நடந்த மோதலில் 9 காவல்துறை அதிகாரிகள் படுகாயமடைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஈகுவடார் நாட்டில் குவாயாகு மற்றும் லட்டாகியூங்கா என்னும் சிறைகள் அமைந்துள்ளது. இந்த 2 சிறைகளுக்குள்ளே அடைக்கப்பட்டிருக்கும் கைதிகளுக்கிடையே திடீரென மோதல் ஏற்பட்டுள்ளது. இவ்வாறு கைதிகளுக்கிடையே திடீரென ஏற்பட்ட மோதலை பயன்படுத்தி லாட்டாகியூங்கா சிறையிலுள்ள சுமார் 45 கைதிகள் தப்பிக்க முயற்சி செய்துள்ளார்கள்.
இவர்களை காவல்துறையினர் மடக்கிப்பிடித்து மீண்டும் சிறைக்குள்ளேயே அடைந்துள்ளார்கள். மேலும் இந்த 2 சிறைக்குள்ளே நடந்த மோதலில் சுமார் 18 கைதிகள் உயிரிழந்துள்ளார்கள்.
இதனையடுத்து 9 காவல்துறை அதிகாரிகள் மற்றும் 35 கைதிகள் இந்த மோதலினால் காயமடைந்துள்ளார்கள். இதனைத் தொடர்ந்து கைதிகளுக்கிடையே நடந்த மோதலை தடுத்து நிறுத்த காவல்துறை அதிகாரிகள் அதிரடியான நடவடிக்கை எடுத்துள்ளார்கள்.