இங்கிலாந்தில் தன்னுடைய ஆடையிலிருந்த சிறிய ரப்பர் துண்டை விழுங்கிய 3 வயது சிறுமி ஒருவர் சுவாசிக்க முடியாமல் மூச்சுத்திணறி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இங்கிலாந்தில் ASDA என்னும் சூப்பர் மார்க்கெட் அமைந்துள்ளது. இந்த சூப்பர் மார்கெட்டிற்கு 3 வயது குழந்தை தன்னுடைய பெற்றோருடன் சென்றுள்ளது. இந்நிலையில் அந்த 3 வயது குழந்தை தன்னுடைய ஆடையிலிருந்த சிறிய ரப்பர் துண்டை பெற்றோருக்கு தெரியாமல் விழுங்கியுள்ளது.
இதனால் அந்த ரப்பர் துண்டு சிறுமியினுடைய தொண்டையில் சிக்கியுள்ளது. இதனையடுத்து அந்த சிறுமி மூச்சு விட முடியாமல் திணறி துடிதுடித்து அங்கேயே மயங்கி விழுந்துள்ளார்.
இதனை கண்டு அதிர்ச்சியடைந்த சிறுமியின் பெற்றோர்கள் அருகிலிருந்த குழந்தைகள் மருத்துவமனைக்கு சிறுமியை அழைத்துச் சென்றுள்ளார்கள். அதன் பின் குழந்தையை பரிசோதனை செய்த மருத்துவர்கள் குழந்தை ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக கூறியுள்ளார்கள்.
இதனையடுத்து மருத்துவர்கள் குழந்தையை பரிசோதனை செய்த போது உண்மை தெரிய வந்துள்ளது. இது தொடர்பாக காவல்துறை அதிகாரிகள் முறையான விசாரணையை மேற்கொண்டு வருவதாக தெரிவித்துள்ளார்கள்.