இங்கிலாந்தில் கடந்த 8 வருடங்களுக்கு முன்னர் லாட்டரியின் மூலம் மிகவும் அதிகப்படியான தொகையை வென்ற பெண் ஒருவர் அவருடைய வீட்டில் உயிரிழந்து கிடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இங்கிலாந்தில் கடந்த 2013ம் ஆண்டு லாட்டரியின் மூலம் margaret என்னும் பெண்மணி 27 மில்லியன் பவுண்டுகளை வென்றுள்ளார் .ஆனால் இவர் தனது வாழ்க்கை இந்த லாட்டரியை வென்றதன் பின்னர் மிகவும் மோசமாக இருந்ததாக அடிக்கடி தெரிவித்துள்ளார். இந்நிலையில் தற்போது 50 வயதுக்கு மேலான margaret வீட்டில் உயிரிழந்து கிடந்துள்ளார்.
இது குறித்து காவல் துறை அதிகாரிகள் தரப்பில் கூறப்பட்டிருப்பதாவது, 8 வருடங்களுக்கு முன்னர் லாட்டரியின் மூலம் பெரும் தொகையை வென்ற margaret டின் மரணத்தில் எந்தவித சந்தேகமும் இல்லை என்றும், அவரது உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது என்றும் தெரிவித்துள்ளார்கள்.