Categories
உலக செய்திகள்

4 மாத கர்ப்பிணி…. திடீரென நடந்த சோகம்…. நிதி திரட்டிய கணவர்….!!

இங்கிலாந்தில் 4 மாத கர்ப்பிணி பெண் ஒருவர் அவரது கணவருடன் பேசிக்கொண்டிருக்கும்போது மூளையில் ரத்தக் கசிவு ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே மயங்கி விழுந்து பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இங்கிலாந்திலுள்ள perton என்னும் கிராமத்தில் 36 வயதுடைய லாரா என்னும் பெண்மணி வசித்து வந்துள்ளார். இவருக்கு 3 குழந்தைகள் உள்ளதோடு மட்டுமின்றி லாரா தற்போது 4 மாத கர்ப்பிணியாகவும் உள்ளார். இந்நிலையில் லாரா அவரது கணவருடன் பேசிக் கொண்டிருக்கும் திடீரென மூளையில் ரத்த கசிவு ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே மயங்கி விழுந்து பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

இதனை கண்ட அவரது கணவர் மிகவும் அதிர்ச்சி அடைந்துள்ளார். இதனையடுத்து 3 குழந்தைகளையும் பரிதவிக்க விட்டு சென்ற லாராவின் நினைவாக அவரது கணவர் 13,000 பவுண்டுகளுக்கு அதிகமாக தொகையைத் திரட்டி சிறு பிள்ளைகளுக்கான நிறுவனம் ஒன்றை தொடங்கியுள்ளார்.

Categories

Tech |