கூலி வேலை செய்து வந்த வாலிபர் திடீரென மரணமடைந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது
தர்மபுரி மாவட்டத்தில் இருக்கும் காரிமங்கலம் பகுதியை சேர்ந்தவர் சிவன் இவரது மகன் தமிழரசன். கிடைக்கும் வேலைகளை செய்து வருவது தமிழரசனின் வழக்கம். இந்நிலையில் சம்பவத்தன்று பச்சனம்பட்டி பகுதியில் நெல் அறுவடையின் காரணமாக மிஷினை எடுத்து சென்றுள்ளார் பூபதி என்பவர். அவருக்கு உதவியாளராக தமிழரசன் சென்றுள்ளார்.
அச்சமயம் திடீரென தமிழரசனுக்கு கடும் வயிற்றுவலி ஏற்பட்டது. இதனைத்தொடர்ந்து அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் தமிழரசனை மீட்டு தர்மபுரி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு தமிழரசனை பரிசோதித்த மருத்துவர்கள் அவருக்கு உடலில் காயம் இருப்பதாக கூறி அதனை தொடர்ந்து ஆபரேஷன் செய்துள்ளனர்.
ஆபரேஷன் முடிந்து மேல்சிகிச்சைக்காக தமிழரசன் சேலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு தமிழரசன் சக்கர நாற்காலியில் சென்ற பொழுது மறுபடியும் வயிற்றில் அடித்து விட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
பின்னர் சேலம் மருத்துவமனையில் சிகிச்சை அளித்தும் பலனின்றி பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார் தமிழரசன். இச்சம்பவம் குறித்து தர்மபுரி காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் குடலில் காயம் வாலிபர் மரணம்