நபர் ஒருவர் தன்னுடைய இறப்பு சான்றிதழை காணவில்லை என்று செய்தித்தாளில் விளம்பரம் கொடுத்துள்ளார். இந்த புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது. ரஞ்சித் குமார் என்பவர், தன்னுடைய இறப்பு சான்றிதழை தொலைந்துவிட்டதாக பத்திரிகையில் விளம்பரம் வெளியிட்ட சம்பவம் சுவாரஸ்யத்தை ஏற்படுத்தியுள்ளது. அந்த விளம்பரத்தில் அசாமில் காலை 10 மணி அளவில் என்னுடைய இறப்பு சான்றிதழை தொலைத்து விட்டேன் என்று குறிப்பிட்டுள்ளார். மேலும் காணாமல் போன அந்த ஆவணத்தின் பதிவு எண் மற்றும் வரிசை எண்ணையும் அவர் அந்த விளம்பரத்தில் பதிவிட்டுள்ளார்.
அதை ரூபின் ஷர்மா என்ற ஐபிஎஸ் அதிகாரி தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து, ‘இந்தியாவில்தான் இப்படியெல்லாம் நடக்கும் என கிண்டலடித்துள்ளார். இதையடுத்து இறந்தவரே ஆவியாக வந்து தன்னுடைய சான்றிதழை காணவில்லை என புகார் அளித்திருக்கிறார் என்பது போன்ற பல சுவாரஸ்ய பதில்களை நெட்டிசன்கள் பதிவிட்டு வருகின்றனர்.