Categories
தேசிய செய்திகள்

இறப்பு சான்றிதழ் வேண்டுமா… அலையாமல் ஆன்லைனிலேயே ஈஸியா வாங்கலாம்…. எப்படி தெரியுமா…?

ஆன்லைன் மூலம் இறப்பு சான்றிதழ் எப்படி விண்ணப்பிப்பது என்பதை பற்றி இந்த தொகுப்பில் நாம் தெரிந்து கொள்வோம்.

விண்ணப்பிக்கும் முறை:

முதலில் https://etownpanchayat.com/PublicServices/Death/ApplyDeath.aspx#! என்ற இணையதளத்தை Open செய்தவுடன் முகப்புபகுதியில் Death Details என்று இருக்கும் அதில் கிளிக் செய்ய வேண்டும். அதை கிளிக் செய்த உடன் Apply Death Registration என்று காண்பிக்கப்படும் அதை பூர்த்தி செய்ய வேண்டும்.

முதலில் மாவட்டம், நகர பஞ்சாயத்து, மின்னஞ்சல் முகவரி, தொலைபேசி எண் ஆகியவற்றை உள்ளீடு செய்ய வேண்டும். அடுத்து இறந்த நபரை (Death Person Information) பற்றிய தகவலை உள்ளீடு செய்ய வேண்டும்.

அவரின் நிரந்தர முகவரி தகவலை (Permanent Address Information) கொடுக்க வேண்டும். அடுத்து எந்த இடத்தில் அந்த நபர் இறந்தார் (Place of Death) என்ற தகவலை கொடுக்க வேண்டும்.

அடுத்து அவரின் முகவரி / நோய் பற்றிய விவரங்களை (Address/Disease Details) கொடுக்க வேண்டும்.

அங்கு கொடுக்கப்பட்டுள்ள அனைத்து விவரங்களையும் பூர்த்தி செய்த பின்னர் Submit பட்டனை கிளிக் செய்ய வேண்டும்.

அதன் பிறகு உங்களுடைய தொலைபேசி எண்ணிற்கு ஒப்புகை எண் (Acknowledgement Number) வரும். அதனை கொண்டு மீண்டும் Death Details -> Track Death Registration-ஐ கிளிக் செய்து உங்களுடைய Request No அல்லது தொலைபேசி எண் தகவல்களை நிரப்பிய பின்னர் Generate பட்டனை கிளிக் செய்தால் இறப்பு சான்றிதழ் (Death Certificate) பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
விண்ணப்பிக்கும் முகவரி: https://etownpanchayat.com/PublicServices/Death/ApplyDeath.aspx#

பயன்கள்: இறப்பு சான்றித்ழானது இறந்தவரின் வாரிசுகளுக்கு கிடைக்க வேண்டிய அரசு சலுகைகள், இறந்தவரின் உடைமைகளை பெறுவதற்கு தேவைப்படும்.

Categories

Tech |