மார்ச் 23 புரட்சியாளர் பகத்சிங்கின் நினைவு நாளையொட்டி அவர் குறித்த ஒரு சிறிய தகவலை இந்த செய்தித் தொகுப்பில் காண்போம்.
இந்தியப் புரட்சியாளர்களான பகத்சிங், ராஜகுரு, சுகதேவ் ஆகிய 3 பேரும் ஆங்கில படையினரால் இன்று தூக்கிலிடப்பட்டனர். மார்ச் 23 அன்று தான் இவர்கள் தூக்கில் இடப்பட்டனர். காந்தியடிகளின் அகிம்சை வழியில்தான் இந்தியா சுதந்திரம் பெற்றது என்று எல்லோரும் கூறி வருகின்றோம். ஆனால் பகத்சிங், ராஜகுரு, சுகதேவ் இவர்களைப் போன்று லட்சக்கணக்கான தோழர்களின் தியாகங்களே இந்தியாவின் சுதந்திரத்திற்கு காரணம். இந்தியாவின் சுதந்திரத்திற்கு பின்னால் இலட்சக்கணக்கானோரின் ரத்தங்கள் சிந்த பட்டிருக்கிறது.
இன்று பகத்சிங்கும் அவரது தோழர்களும் தூக்கிலிடப்பட்ட நாள் என்பதால், அவரது லட்சியம், நோக்கம் குறித்து இனி காண்போம். நாங்கள் தூக்கிலிடப்பட்ட பின் மறைந்தது நாங்களாக தான் இருப்போமே தவிர, எங்களது தத்துவங்கள், சிந்தனைகள் ஆகியவற்றை வருங்கால இளைஞர்கள் எடுத்துச் செல்வார்கள். அகிம்சை வழியில் அமைதியாக அடிமை வாழ்க்கையை வாழ முடியுமே தவிர,
புரட்சியால் மட்டுமே உரிமையுடன் ஆள முடியும் என்று தெரிவித்தவர் பகத்சிங். தூக்கிலிடுவதற்கு சில நிமிடங்களுக்கு முன்பு வரை கூட புத்தகம் படித்துக் கொண்டிருந்தார். மேற்கொண்டு வாசிக்க புத்தகம் வேண்டும் என்று கேட்டார். அப்போது சிறைச்சாலை அதிகாரி சாகப் போகிறாய் இப்பொழுது எதற்கு புத்தகம் என்று கேட்க சாகும் தருவாயில் முட்டாளாக சாக நான் விரும்பவில்லை. எதையேனும் கற்றுக் கொண்டிருக்கும் நேரத்தில் இறப்பதே எனக்கு பெருமை என்று தெரிவித்தார். 23 ஆண்டுகள் மட்டுமே உயிர்வாழ்ந்த பகத்சிங் இன்னும் ஈராயிரம் ஆண்டுகள் பேசப்படும் அளவிற்கு அற்புத சிந்தனைகளை நமக்கு தந்ததோடு, மிகப்பெரிய தியாகத்தையும் இந்திய மக்களுக்காக செய்திருக்கிறார் அவரை நாம் நினைவு கூறுவோம்.