மணல் லாரி மோதியதால் காவலர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
தஞ்சாவூர் மாவட்டத்தை சேர்ந்தவர் மோசஸ் மோகன்ராஜ். இவர் பட்டுக்கோட்டை அருகே இருக்கும் அதிராம்பட்டினம் காவல் நிலையத்தில் காவலராகப் பணியாற்றி வந்தார். இவர், தனது மனைவி ஜெனிபர், 21/2 வயது மகள் கேத்தரின் எஸ்தருடன் அதிராம்பட்டினத்தில் வசித்து வந்துள்ளார். சமீபத்தில் இவர் கும்பகோணம் அருகே திருப்பனந்தாள் காவல் நிலையத்துக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டு இருந்தார்.
சென்ற சில தினங்களாக விடுமுறையில் இருந்த மோசஸ், தனது நண்பர்களைப் பார்க்க தஞ்சாவூருக்கு பைக்கில் பெரியகோயில் பகுதியிலிருந்து மருத்துவக் கல்லூரி வழியாக சென்று கொண்டிருந்தார். அப்போது அங்குள்ள மேம்பாலத்தில், எதிரே வந்த மணல் லாரி இவர் வந்த பைக் மீது வேகமாக மோதியது. இதில் பலத்த காயமடைந்த அவரை, உடனடியாக மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அதன்பின் சிகிச்சை பலனில்லாமல் மோகன்ராஜ் பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் இந்த சம்பவத்தை புலனாய்வு துறையினர் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.