47 மாவட்டங்களில் கொரோனா தொற்று இல்லை என்பது தெரியவந்துள்ளது.
இந்தியாவில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று படிப்படியாக குறைந்து கொண்டே வருகின்றது. மருத்துவர்களின் பல்வேறு முயற்சிகளுக்குப் பிறகு இந்த கொரோனா தொற்று குறைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியாவில் 47 மாவட்டங்களில் கொரோனா தொற்று பாதிப்பில்லாத மாவட்டங்களாக உள்ளது. அதேபோல கடந்த மூன்று வாரங்களாக 257 மாவட்டங்களில் இறப்புகள் எதுவும் பதிவாகவில்லை என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
கொரோனா பாதிப்பு இந்தியாவில் படிப்படியாக குறைந்து வருவது மக்களிடையே நம்பிக்கையை அதிகரித்துள்ளது. கொரோனா பாதிப்பின் காரணமாக மக்கள் பல்வேறு பொருளாதார பிரச்சினைகளை சந்தித்து உள்ளன. இந்த செய்தி மக்களிடையே சற்று நிம்மதியை தந்துள்ளது.