கன்னியகுமாரியில் ஓடும் ரயிலில் இருந்து வாலிபர் ஒருவர்விழுந்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே நேற்று அடையாளம் தெரியாத ஆண் சடலம் ஒன்று தண்டவாளத்தில் கிடந்துள்ளது. இதை கண்ட ஊர்மக்கள் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக நாகர்கோவில் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
பின் மேற்கொண்ட விசாரணையில் அவர் கன்னியாகுமரியை சேர்ந்த ரமேஷ் என்பதும், கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள பேக்கரி ஒன்றில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார் என்பதும் கண்டறியப்பட்டது. மேலும் உறவினர்களை காண தனது சொந்த ஊருக்குத் திரும்பிய அவர் திருவனந்தபுரத்திலிருந்து ரயிலேறி கன்னியாகுமரிக்கு வந்து கொண்டு இருந்தார்.
அப்போது படியில் பயணம் மேற்கொண்ட அவர், எதிர்பாராதவிதமாக தவறி விழுந்து உயிரிழந்ததாகவும் விசாரணையில் கூறப்பட்டது. இதையடுத்து அவர் இறந்த செய்தி அவரது உறவினர்களுக்கும் தெரிவிக்கப்பட இவரது மரணம் குறித்து ரயில்வே அதிகாரிகளும் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.