அமெரிக்க காவல்துறை அதிகாரி ஒருவர் கருப்பினத்தவரை தன்னுடைய கால் முட்டியால் அழுத்தி கொலை செய்த சம்பவத்தை வீடியோ எடுத்து தைரியமாக சமூக வலைத்தளங்களில் பதிவிட்ட பெண்ணிற்கு விருது வழங்கப்பட்டுள்ளது.
Minneapolis என்னும் மாகாணத்தில் வைத்து அமெரிக்க காவல்துறை அதிகாரி ஒருவர் தன்னுடைய கால் முட்டியை கொண்டு George Floyd என்ற கருப்பினத்தவரின் கழுத்தில் அழுத்தியதால், அவர் துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இந்த சம்பவத்தை அந்த பகுதியில் சென்ற 17 வயதுடைய Darnella Frazier என்ற பெண்மணி வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளார்.
இந்த வீடியோ உலகம் முழுவதும் பரவி பெரிய சர்ச்சையை கிளப்பியதையடுத்து தன்னுடைய கால் முட்டியை கொண்டு கழுத்தில் அழுத்தி கருப்பினத்தவரை கொலை செய்த காவல்துறை அதிகாரியின் குற்றம் நிரூபிக்கப்பட்டதால் அவருக்கு தண்டனை விதிக்கப்பட்டது.
இந்நிலையில் இந்த வீடியோவை தைரியமாக சமூக வலைதளங்களில் பதிவிட்டு காவல்துறை அதிகாரிக்கு தண்டனை வாங்கிக் கொடுத்த அந்தப் பெண்ணிற்கு Pulitzer Prize Special Citations and Awards என்ற குழு சிறப்பு பரிசுகளையும், பட்டத்தையும் வழங்கியுள்ளது.