அமெரிக்காவில் 12 மாடி அடுக்கு கட்டிடம் இடிந்து விழுந்ததில், இதுவரை எவரும் உயிருடன் மீட்கப்படாத நிலையில் 3 நாட்களாக தொடர்ந்து மீட்பு பணிகள் நடைபெற்று வருகிறது.
அமெரிக்காவிலிருக்கும் ஃபுளோரிடாவில் கடந்த வியாழக்கிழமை 12 மாடி அடுக்கு கட்டிடம் ஒன்று இடிந்து விழுந்துள்ளது. இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மீட்பு குழுவினர்கள் தொடர்ந்து 3 நாட்களாக இடிந்து விழுந்த கட்டிடத்தில் இடிபாடுகளில் சிக்கி இருப்பவர்களை மீட்கும் பணிகளில் ஈடுபட்டு வருகிறார்கள்.
ஆனால் இதுவரை கட்டிடத்தின் இடிபாடுகளில் சிக்கிய எவருமே உயிருடன் மீட்கப்பட்ட வில்லை. இந்நிலையில் கட்டிடத்தின் இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 9 ஆக உயர்ந்துள்ளது. இந்த கட்டிட இடிபாடுகளில் சுமார் 150 க்கும் மேலானோர் சிக்கியிருக்கலாம் என்று அதிகாரிகள் தரப்பு தெரிவித்துள்ளார்கள்.