Categories
உலக செய்திகள்

தொட்டிக்குள் இறந்து கிடந்த மகன்…. உல்லாசத்தில் ஈடுபட்டு கொண்டிருந்த தாய்…. விசாரணையில் வெளிவந்த உண்மை….!!

8 வயது சிறுவன் குளியல் தொட்டியில் இறந்து கிடந்ததால் காவல்துறையினர் அவருடைய தாயை கைது செய்து விசாரணை மேற்கொண்டதில் அவர் கொடுத்த வாக்குமூலம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவிலிருக்கும் டெக்சாஸ்சிலுள்ள ஒரு ஹோட்டலில் 8 வயது சிறுவனும், அவருடைய தாயும், தாயினுடைய காதலனும் தங்கியுள்ளார்கள். இதனையடுத்து 8 வயது சிறுவன் ஹோட்டல் அறையிலுள்ள குளியல் தொட்டியில் மர்மமான முறையில் இறந்து கிடந்துள்ளார். இதுகுறித்து காவல்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டுள்ளது. அந்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் 8 வயது சிறுவனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளார்கள்.

இதனையடுத்து காவல்துறையினர் ஹோட்டல் அறையில் தங்கியிருந்த 8 வயது சிறுவனின் தாயான kailaa மற்றும் அவருடைய காதலனான Dominique என்பவரையும் கைது செய்துள்ளார்கள். இதற்கிடையே சிறுவனின் பிரேத பரிசோதனை முடிவுகள் காவல்துறையினருக்கு கிடைத்துள்ளது. அந்த பிரேத பரிசோதனையின் முடிவில் சிறுவனினுடைய பற்கள் உடைக்கப்பட்டிருப்பதும், அவனுடைய காலில் பலமுறை அடைக்கப்பட்டு சித்திரவதை செய்திருப்பதும் தெரியவந்துள்ளது.

இந்நிலையில் காவல்துறையினர் 8 வயது சிறுவனின் தாயிடமும், அவருடைய காதலனிடமும் விசாரணை மேற்கொண்டதில் இருவரும் கொடுத்த வாக்குமூலம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது 8 வயது சிறுவனை அவருடைய தாய் குளிப்பதற்காக அனுப்பி வைத்துவிட்டு இருவரும் தனியறையில் உடலுறவில் ஈடுபட்டுள்ளார்கள் இதனையடுத்து குளியலறைக்கு சென்று பார்த்தால் 8 வயது சிறுவன் இறந்து கிடந்ததாக இருவரும் காவல்துறையினரிடம் வாக்குமூலம் கொடுத்துள்ளார்கள்.

Categories

Tech |