Categories
கன்னியாகுமாரி சற்றுமுன் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

கொரோனா சிகிச்சை வார்டில் உயிரிழப்பு – கன்னியாகுமரியில் சோகம் ..!!

கன்னியாகுமரியில் கொரோனா வார்டில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டு இருந்த பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ்நாட்டில் 26பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் காஞ்சிபுரத்தை சேர்ந்தவர் பூரண குணமடைந்து வீட்டில் மருத்துவர் ஆலோசனையில் இருக்கின்றார். மதுரையை சேர்ந்து ஒருவர் உயிரிழந்த நிலையில் ,  உத்திரப்பிரதேசத்தை சேர்ந்த இளைஞர் இரண்டு நாளில் வீடு திரும்ப இருப்பதாக அமைச்சர் தெரிவித்தார். இதனால் 23 பேர் கொரோனா உறுதி செய்யப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மேலும் தமிழகத்தில் 15,492 பேர் கண்காணிப்பில் உள்ளனர். 2.9 லட்ச பயணிகளுக்கு கொரோனா அறிகுறி உள்ளதா ? என பரிசோதிக்கப்பட்டது. இதுவரை 890 பேரின் மாதிரிகள் எடுக்கப்பட்டு சோதனைக்கு அனுப்பப்பட்டதில் 757 பேருக்கு கொரோனா இல்லை என உறுதி செய்யப்பட்டது. கொரோனா அறிகுறியுடன் இருந்த 110 பேரின் மாதிரிகள் சோதனைக்கு அனுப்பப்பட்டு முடிவுக்கு காத்திருப்பதாகவும் அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவிந்த நிலையில் கன்னியாகுமரியில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

கன்னியாகுமரி அரசு மருத்துவமனையில் கொரோனா வார்டில் நேற்று அனுமதிக்கப்பட்ட நபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கோடிமுனை பகுதியைச் சேர்ந்த 40 வயதான நபர் குவைத் சென்று 3ஆம் தேதி திரும்பினார். 40 வயதான இவருக்கு மூளை காய்ச்சல், கல்லீரல் பாதிப்பு இருந்துள்ளது. இறந்த நபரின் சளி ரத்த மாதிரிகள் நெல்லை அரசு மருத்துவனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. பரிசோதனை முடிவு வந்த பிறகே அவரது இறப்பிற்கான காரணம் தெரியவரும் என மருத்துவமனை தெரிவித்துள்ளது.

Categories

Tech |