ஜெர்மனியில் முதியவர் நீதிமன்ற வளாகத்திற்குள் வைத்து பெண்ணை சுட்டு விட்டு தானும் தற்கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஜெர்மனியில் 78 வயதுள்ள ஆண் ஒருவர் வாடகை வீட்டில் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் அந்த வீட்டினுடைய உரிமையாளரான 49 வயதுள்ள பெண்மணிக்கும், அந்த முதியவருக்குமிடையே வீட்டை காலி செய்வது தொடர்பாக பிரச்சனை ஏற்பட்டிருக்கிறது. இதனையடுத்து இருவரும் celleயிலிருக்கும் மாவட்ட நீதிமன்றத்தை நாடியுள்ளனர்.
இதனை தொடர்ந்து திடீரென்று நீதிமன்ற வளாகத்திற்கு உள்ளே முதியவர் வீட்டின் உரிமையாளரை துப்பாக்கியால் சுட்டுவிட்டார். அதன்பின் தன்னைத் தானே சுட்டுக்கொண்டு தற்கொலை செய்துள்ளார். இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.