லண்டனில் பள்ளி மாணவனை கத்தியால் குத்தி கொலை செய்தது தொடர்பாக 15 வயதாகும் சிறுவனை காவல்துறையினர் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியுள்ளனர்.
மேற்கு லண்டனில் இருக்கும் Global Acadamy என்ற பள்ளிக்கு 15 வயதுடைய மாணவன் சென்று கொண்டிருந்துள்ளான். அப்போது மாணவன் கத்தி குத்து பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளான். இதுகுறித்து காவல்துறையினர் தரப்பில் கூறியதாவது, 14 முதல் 19 வயதுக்குட்பட்ட மாணவர்களுக்கிடையே சண்டை நடப்பதாக எங்களுக்கு ரகசியமாக தகவல் கிடைத்தது. இதனையடுத்து நாங்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பார்த்தபோது 15 வயதுடைய மாணவன் கத்திக்குத்து பட்டு உயிரிழந்து கிடந்தார் என்றுள்ளார்.
இதனைத் தொடர்ந்து இந்த கத்திகுத்து தொடர்பாக காவல்துறையினர் 15 வயது சிறுவனை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியுள்ளனர். அதன்பின் கத்தி குத்து பட்டு உயிரிழந்த மாணவனின் குடும்பத்தினர், நம் நாட்டில் என்னதான் நடக்கிறது, வன்முறை அரங்கேறுவதை தடுத்து நிறுத்த வேண்டும் என்று மிகுந்த மன வேதனையுடன் தெரிவித்துள்ளார். இச்சம்பவம் குறித்து பள்ளி ஆசிரியர் ஒருவர் கூறியதாவது, இது பட்டப்பகலில் நடந்த மிகவும் மோசமான சம்பவம் என்றும், இதுகுறித்து யாருக்காவது தகவல் தெரிந்திருந்தால் உடனே விரைந்து வந்து காவல்துறையினரிடம் தகவல் கொடுக்குமாறு கூறியுள்ளார்.