அமெரிக்காவில் 100 அடி உயரத்திலிருந்து கீழே விழுந்த சூடான காற்று பலூன் ஒரு தெருவிலிருக்கும் மின் இணைப்புகளில் பட்டு தீப்பிடித்து எரிந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நியூ மெக்சிகோவில் அல்புகெர்க் என்னும் நகரத்தில் சுமார் 100 அடி உயரத்தில் சூடான காற்று பலூனில் 5 பேர் பயணம் செய்துள்ளார்கள். இந்நிலையில் திடீரென்று பல வண்ண பலூன்கள் 100 அடி உயரத்திலிருந்து தரையில் விழுந்துள்ளது.
இதனையடுத்து பலூனிலிருந்து பிரிந்த பயணிகளின் கூடை ஒரு தெருவிலிருக்கும் மின் இணைப்புகளின் மீது பட்டதால் தீப்பிடித்து எரிந்துள்ளது. இதனால் சூடான காற்று பலூனில் பயணம் செய்த 5 பேரும் உயிரிழந்துள்ளதாக காவல்துறை அதிகாரிகள் தரப்பு தெரிவித்துள்ளது.