காபூல் நகரின் விமான நிலையத்தில் ஐ.எஸ் தீவிரவாத அமைப்பினர் வெடிகுண்டு தாக்குதல் நடத்தியதில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 175 ஆக உயர்ந்திருக்கிறது.
ஆப்கானிஸ்தான் தலிபான்களின் கட்டுப்பாட்டிற்கு சென்றது. எனவே, இந்தியா, அமெரிக்கா போன்ற பல நாடுகள் தங்கள் மக்களை ஆப்கானிஸ்தானிலிருந்து வெளியேற்றி வருகிறது. மேலும், அந்நாட்டிலிருந்து வெளியேற நினைக்கும் மக்களுக்கும் உதவி வருகிறது. எனவே காபூல் விமான நிலையத்தில் மக்கள் கூட்டம் அதிகமாக காணப்படுகிறது.
இந்நிலையில், மீட்புப் பணிகள் நடந்து கொண்டிருக்கும் போதே, விமான நிலையத்தில் ஐ.எஸ் தீவிரவாத அமைப்பினர், கடந்த வியாழக்கிழமை அன்று வெடிகுண்டு தாக்குதல் நடத்தியுள்ளனர். ஹரசன் பிரிவு தீவிரவாதிகளால், தற்கொலைப்படை தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதில், நூற்றுக்கும் அதிகமானோர் பலியாகினர்.
தற்போது உயிரிழந்தோர் எண்ணிக்கை 175-ஆக உயர்ந்திருப்பதாகவும், இதில் 13 பேர் அமெரிக்க பாதுகாப்பு படையினர் என்றும் தெரியவந்துள்ளது. மீதமுள்ள நபர்கள், ஆப்கானிஸ்தான் மற்றும் பிரிட்டன் நாட்டினர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.