Categories
உலக செய்திகள்

யாருமே இதை எதிர்பார்க்கல..! பல கனவுகளுடன் காத்திருந்த இளைஞர்… சோகத்தில் மூழ்கிய குடும்பம்..!!

தேசிய லாட்டரியில் பெருந்தொகையை பரிசாக பெற்ற பிரித்தானிய இளைஞர் ஒருவர் தனது 23-வது அகவையில் திடீரென உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பிரித்தானியாவில் உள்ள பெல்பாஸ்ட் என்ற பகுதியில் வசித்து வந்தவரும், உல்ஸ்டர் பல்கலைக்கழகத்தில் சிவில் இன்ஜினியரிங் பட்டம் முடித்தவருமான கல்லும் பிட்ஸ்ப்பற்றிக் எனும் இளைஞன் தனது பெற்றோரின் மளிகை கடையில் வேலை செய்து வந்த நிலையில் தேசிய லாட்டரியில் 390,000 பவுண்ட் எனும் பெருந்தொகையை பரிசாக பெற்றுள்ளார். மேலும் அவருக்கு தனது 17 வயதில் சொந்தமாக கார் வாங்க வேண்டும் என்ற மிகப்பெரிய ஆசை இருந்துள்ளது. அதோடு மட்டுமல்லாமல் மான்செஸ்டர் யுனைடெட் கால்பந்து அணியில் அதிகம் நாட்டம் கொண்ட அவர் தனக்கு பிடித்த இந்த ஆணி ஓல்ட் டிராஃஓர்ட்-ல் விளையாடுவதை நேரில் சென்று பார்க்க வேண்டும் என்ற விருப்பமும் இருந்துள்ளது.

இந்நிலையில் பல்லிமார்டின் காசி எனும் உள்ளூர் கால்பந்து அணியில் உறுப்பினராக இருந்த கல்லும் பிட்ஸ்ப்பற்றிக் கடந்த செவ்வாய்க்கிழமை அன்று திடீரென மரணமடைந்ததாக வெளியான செய்தி அந்த கால்பந்து அணி நிர்வாகிகளிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் கல்லும் பிட்ஸ்ப்பற்றிக்-ன் இந்த மறைவு அவருடைய குடும்பத்தினர் மற்றும் உறவினர்களையும் பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

Categories

Tech |