Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

காருக்குள் விளையாடிய குழந்தைகள்… ‘லாக்’ ஆன கதவு… மூச்சு திணறி உயிரிழந்த பரிதாபம்..!!

காரில் விளையாடிக் கொண்டிருந்த குழந்தைகள் கதவு லாக் ஆனதால் மூச்சுத்திணறி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது

கள்ளக்குறிச்சி மாவட்டம் குலதீபமங்கலம் பகுதியை சேர்ந்த குழந்தைகள் வனிதா மற்றும் ராஜ் இருவரும் வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த நிலையில் திடீரென காணாமல் போயினர். வீட்டில் இருந்தவர்கள் அக்கம்பக்கத்தில் தேடிப்பார்த்தும் குழந்தைகள் பற்றி எந்த தகவலும் கிடைக்காமல் தவித்தனர். இந்நிலையில் வீட்டின் அருகே இருந்த காரை பார்த்தபொழுது காரின் உள்ளே குழந்தை மயங்கி கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர்கள் கார் கதவைத் திறந்து குழந்தைகளை மீட்டனர்.

ஆனால் அவர்கள் பரிதாபமாக மூச்சுத்திணறி உயிரிழந்திருந்தனர். காரின் உள்ளே விளையாடிக்கொண்டிருந்த போது தானாக கதவு மூடிக் கொண்டதால் இரண்டு குழந்தைகளும் வெளியே வரமுடியாமல் உயிரிழந்துள்ளனர். இரண்டு மணி நேரத்திற்கும் மேல் கார் கதவு திறக்கப்படாத நிலையில் சடலமாகவே குழந்தைகள் மீட்கப்பட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் குழந்தைகளின் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |