Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

எங்க போயிருப்பாரு… கடையின் முன்பாக கிடந்த சடலம்… குடும்பத்திற்கு காத்திருந்த அதிர்ச்சி…!!

தனியார் பேருந்தில் கண்டக்டர் ஒருவர் மதுபான கடையின் அருகில் பிணமாக கிடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள நளப்பநாயகன்அள்ளி பகுதியில் கோபால் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஒரு தனியார் பேருந்தில் கண்டக்டராக பணிபுரிந்து வந்துள்ளார். இவருக்கு திருமணமாகி 3 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் கோபால் சென்ற இரண்டு நாட்களுக்கு முன்பாக வீட்டிலிருந்து வெளியே சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை.

இதனை அடுத்து காலை நேரத்தில் அவர் அப்பகுதியில் இருக்கும் மதுபான கடையின் அருகில் உடலில் காயங்களோடு பிணமாக கிடந்துள்ளார். இதுபற்றி தகவல் அறிந்த காவல்துறையினர் விரைவாக சென்று கோபாலின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் கோபால் கொலை செய்யப்பட்டாரா என்பது பற்றியும், இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |