Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

ஒரே நாளில் 8 பேர் மரணம்…! தமிழக்த்தில் கொரோனாவுக்கு 61 பேர் பலி

தமிழகத்தில் கொரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 61 ஆக அதிகரித்துள்ளது.

இந்தியாவில் வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸால் மிரட்டுள்ள ஒட்டுமொத்த நாடும் ஊரடங்கு அமல் படுத்தி அதனை கட்டுப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. ஆனாலும் கொரோனாவின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. இன்னும் 5 நாட்களில் ஊரடங்கு முடிவடைய இருக்கும் நிலையில் மத்திய, மாநில அரசு ஊரடங்கை நீடிக்கலாமா என்பது குறித்து ஆலோசித்து வருகிறன. இதனிடையே கொரோனாவின் பரவலும் பல்வேறு மாநிலங்களில் நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு உச்சம் பெற்றுள்ளது.

தினந்தோறும் எந்த அளவுக்கு கொரோனா பாதிப்பு அதிகரித்துக் கொண்டு செல்கின்றதோ அந்த அளவுக்கு உயிரிழந்தவர் எண்ணிக்கையும் கணிசமாக உயர்ந்து கொண்டே வருகின்றது. ஆனாலும் பிற நாடுகளை ஒப்பிடுகையில் இந்தியாவில் உயிரிழப்பு குறைந்த அளவாக இருக்கிறது. குறிப்பாக தமிழகம் பல்வேறு சுகாதார நடவடிக்கைகளை மேற்கொண்டு கொரோனா இறப்பு விகிதத்தை கட்டுப்படுத்தி வருகிறது. இதை மத்திய சுகாதார அமைச்சகம் கூட தெரிவித்து தமிழகத்தை பாராட்டியது.

இந்த நிலையில் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறித்து இன்று வெளியான தகவலில், தமிழகத்தில் மேலும் 716 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதனால் மொத்த எண்ணிக்கை 8,718 ஆக அதிகரித்துள்ளது. 6520 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். அதே போல இன்று ஒரே நாளில் 83 பேர்  குணமடைந்துள்ளதால் மொத்த எண்ணிக்கை 2,134ஆக உயர்ந்துள்ளது. இன்று ஒரே நாளில் என்றும் இல்லாத வகையில் 8 பேர் மரணம் அடைந்ததால் பலியானோர் எண்ணிக்கை 61ஆக அதிகரித்துள்ளது.

Categories

Tech |