Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

சற்றும் எதிர்பாராத தருணம்…. பரிதாபமாக உயிரிழந்த மான்கள்…. திருநெல்வேலியில் நடந்த சோகச் சம்பவம்….!!

திருநெல்வேலியில் 2 மான்கள் வாகனம் மோதி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருநெல்வேலி மாவட்டம் மானூரில் அமைந்திருக்கும் குவாரி பகுதியில் 2 மான்கள் சாலையை கடக்க முயன்றது. அப்போது அவ்வழியாக அதிவேகமாக வந்த வாகனம் சற்றும் எதிர்பாராதவிதமாக மான்களின் மீது மோதியது. இதனால் 2 மான்களும் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தது.

இச்சம்பவம் குறித்து தகவலறிந்து வந்த காவல்துறையினர் இறந்து கிடந்த மானை பார்வையிட்டு வனத்துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளனர். அத்தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வனத்துறையினர் 2 மானினுடைய உடல்களையும் கைப்பற்றினர்.

Categories

Tech |