அடுத்தடுத்து நிகழ்ந்த திமுக எம்.எல்.ஏக்களின் மரணத்தால் திமுக எம்பிக்கள் கூட்டம் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை திருவெற்றியூர் திமுக சட்டமன்ற உறுப்பினர் எம்.எல்.ஏ கே.பி.பி சாமி நேற்று உயிரிழந்ததை தொடர்ந்து இன்று வேலூர் மாவட்டம் குடியாத்தத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்ற திமுக சட்டமன்ற உறுப்பினர் காத்தவராயன் இயற்கை எய்தினார். இரண்டு நாட்களில் அடுத்தடுத்து திமுக உறுப்பினர்கள் மரணமடைந்ததால் திமுகவினர் அதிர்ந்து போயுள்ளனர். இந்நிலையில் அண்ணா அறிவாலயத்தில் ஸ்டாலின் தலைமையில் நாளை நடக்க இருந்த திமுக எம்பிக்கள் கூட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது.