மனைவியின் தவறான செயலால் கணவன் குழந்தையை தூக்கிலிட்டு தானும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திரப்பிரதேச மாநிலத்தில் இருக்கும் சித்தூரை சேர்ந்த கணேஷ் என்பவர் கொரியர் டெலிவரி செய்யும் வேலையை செய்து வந்தார். இவருக்கு ஐந்து வயதில் மகள் உள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் பிற்பகல் தனது மகளை தூக்கிலிட்டு கொலை செய்துவிட்டு தானும் தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இருவரது உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்கு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தற்கொலை செய்துகொள்வதற்கு முன்பாக காணொளி ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், “பணத்திற்காக எனது மனைவி பலருடன் திருமணத்தைத் தாண்டிய உறவில் இருந்தால். அதில் மனைவியுடன் இருந்த நபர் ஒருவர் என் மகளிடமும் தகாத முறையில் நடந்து கொண்டதாக எனது மகள் என்னிடம் தெரிவித்தார். இதுகுறித்து பலமுறை என் மனைவியிடம் நான் கேட்டும் எனது கேள்விகளை காது கொடுத்து கேட்கவில்லை. எனவே காதலித்து தேடிக் கொண்ட எனது வாழ்க்கையை நானே முடித்துக் கொள்ளப் போகின்றேன்” என தெரிவித்திருந்தார். அவரது காணொளி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. கணேஷ்க்கும் அவரது மனைவிக்கும் ஏற்கனவே விவாகரத்து ஆனது குறிப்பிடத்தக்கது.