இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் ஆல்ரவுண்டரான மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த பாபு நட்கர்னி வயது மூப்பின் (86) காரணமாக நேற்று மும்பையில் காலமானார். காலமான நட்கர்னிக்கு மனைவியும் ஒரு மகளும் உள்ளனர்.
இந்திய அணிக்காக விளையாடியுள்ள இவர் 41 டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்று 88 விக்கெட்டுகளையும், 1,414 ரன்களையும் எடுத்துள்ளார். மேலும் 1964ஆம் ஆண்டு சென்னையில் நடைபெற்ற இங்கிலாந்து அணிக்கெதிரான டெஸ்ட் போட்டியில் தொடர்ச்சியாக 21 மெய்டன் ஓவர்களை வீசி உலக சாதனை படைத்தார்.
அந்தப் போட்டியில் 32 ஓவர்களை வீசிய அவர் 27 மெய்டனுடன் ஐந்து ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இவர் 191 முதல்தரப் போட்டிகளில் பங்கேற்று 8,880 ரன்களையும் 500 விக்கெட்டுகளையும் எடுத்துள்ளார். இவரின் இறப்பு செய்தியறிந்து சச்சின் உட்பட பல்வேறு கிரிக்கெட் பிரபலங்களும் தங்களது இரங்கலைத் தெரிவித்துவருகின்றனர்.
Very sad to hear about the demise of Shri Bapu Nadkarni. I grew up hearing about the record of him bowling 21 consecutive maiden overs in a Test. My condolences to his family and dear ones.
Rest in Peace Sir🙏. pic.twitter.com/iXozzyPMLZ— Sachin Tendulkar (@sachin_rt) January 17, 2020