Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

இப்படி நடக்கும்னு நினைக்கல… திடீரென ஏற்பட்ட மூச்சு திணறல்…. சோகத்தில் மூழ்கிய குடும்பம்…!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் பட்டுக்கோட்டை சுயேட்சை வேட்பாளர் உடல் நலக்குறைவால் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள பட்டுக்கோட்டை பகுதியில் பாலகிருஷ்ணன் என்பவர் வசித்து வந்தார். இவர் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் பட்டுக்கோட்டை பகுதியில் சுயேச்சை வேட்பாளராக போட்டியிட்டு தோல்வியை தழுவியுள்ளார். இந்நிலையில் உடல்நலம் பாதிக்கப்பட்ட அவர் புதுக்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அங்கு அவருக்கு மூச்சு திணறல் ஏற்பட்டு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதனால் அவருக்கு கொரோனா தொற்று ஏதும் இருந்ததா என்று மருத்துவமனையில் கேட்ட போது அதிகாரிகள் எந்த பதிலும் தெரிவிக்கவில்லை.

Categories

Tech |