கடலூரில் ஓடையில் ஆண் சடலம் ஒன்று கண்டெடுக்கப்பட்டதையடுத்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கடலூர் மாவட்டம் சிதம்பரம் பகுதியை அடுத்த வண்டிகேட் பகுதியில் உள்ள பாசிமுத்தான் ஓடையில் நேற்று காலை அடையாளம் தெரியாத ஆண் சடலம் ஒன்று செடி கொடிகளில் சிக்கி மிதந்து கொண்டிருந்தது. இதை கண்ட ஊர்மக்கள் காவல் நிலையத்தில் தகவல் தெரிவிக்க சம்பவ இடத்திற்கு விரைந்த அவர்கள் பிணத்தை மீட்டு இறந்து கிடந்தவர் யார் என்று விசாரிக்கையில்,
அவர் சேலம் மாவட்டம் ஆற்காட்டை சேர்ந்த பாஸ்கர் என்றும், அவர் சிதம்பரத்தில் தங்கி கூலி தொழிலாளியாக பணியாற்றி வருவதும் தெரியவந்ததையடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. பின் இது குறித்து அதிகாரிகள் வழக்கு பதிவு செய்து விசாரிக்கையில் ஓடையில் குளிக்கச் சென்ற போது ஆழம் தெரியாமல் இறங்கி நீச்சல் தெரியாமல் உயிரிழந்தாரா? என்ற கோணத்தில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.