தேனி மாவட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் மும்பை சிறையில் இருந்த சமூக ஆர்வலரின் மரணத்திற்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
தேனி மாவட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் திடீர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் மும்பை தலோஜா சிறையில் அடைக்கப்பட்டிருந்த திருச்சியை சேர்ந்த சமூக ஆர்வலரான ஸ்டான் சுவாமி என்பவர் மரணமடைந்துள்ளார். அவரது மரணத்திற்கு காரணமாக இருந்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், கருத்து சுதந்திரத்தை பாதுகாக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதனையடுத்து ஆர்ப்பாட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட தாலுகா செயலாளர் முனீஸ்வரன் தலைமை தங்கியுள்ளார். இதனைத்தொடர்ந்து மாவட்ட செயலாளர் வெங்கடேசன், தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்ட செயலாளர் தர்மர், இந்திய மாணவர் சங்க செயலாளர் நாகராஜ், விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர் நாகரத்தினம் மற்றும் கட்சி உறுப்பினர்கள் பலரும் பங்கேற்றுள்ளனர்.