இலங்கைத் தமிழரும் பிரபல நடிகருமான இந்திரகுமார் என்பவர் இலங்கை அகதி முகாமில் வசித்து வந்துள்ளார். இவர் தனியார் தொலைக்காட்சி சீரியல் ஒன்றில் நடித்து வந்தார். இந்நிலையில் சம்பவத்தன்று இரவு தன்னுடைய நண்பர்களுடன் தியேட்டருக்கு சென்று படம் பார்த்துவிட்டு மதனகோபால புரத்தில் உள்ள தன்னுடைய நண்பர்களுடன் தங்கி இருந்துள்ளார். அப்போது அவர் மின்விசிறியில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இது குறித்து தகவலறிந்த காவல்துறையினர் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி இறந்ததற்கான காரணம்என்ன? என்று விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் திரைப்படங்களில் நடிக்க நல்ல வாய்ப்புகள் கிடைக்காததால் இந்திரகுமார் மனம் உடைந்து தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. ஆனால் அவர் ஏன் தற்கொலை செய்து கொண்டார்? என்பது இன்னும் மர்மமாகவே உள்ளது. இது குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.