இந்தியா – வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான 3-வது டி20 போட்டியில் இந்திய அணி 17 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்தியா – வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான 3-வது மற்றும் கடைசி டி20 போட்டி நேற்று நடைபெற்றது. இதில் முதலில் களமிறங்கிய இந்திய அணி 5 விக்கெட் இழப்புக்கு 184 ரன்கள் குவித்தது.இதன்பிறகு களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி 20 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 167 ரன்கள் எடுத்தது. இதனால் இந்திய அணி 17 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
குறிப்பாக நேற்றைய போட்டியில் டெத் ஓவர் என அழைக்கப்படும் கடைசி 5 ஓவரில் இந்தியா 86 ரன்கள் குவித்தது. இதுவே டி20 தொடரில் கடைசி 5 ஓவரில் இந்தியாவின் அதிக ரன்கள் என்ற சாதனையை படைத்துள்ளது.இதற்கு முன்பாக கடந்த 2007-ம் ஆண்டில் டர்பனில் நடைபெற்ற இங்கிலாந்து அணிக்கெதிரான எதிரான் போட்டியில் இந்தியா 80 ரன்கள் எடுத்தது குறிப்பிடத்தக்கது.