Categories
உலக செய்திகள்

51 நபர்களுக்கு மரண தண்டனை விதித்த நீதிமன்றம்…. அப்படி என்ன செய்தார்கள்…?

காங்கோ ஜனநாயகக் குடியரசில் ஐநா பணியாளர்கள் இருவர் கொலை செய்யப்பட்டது தொடர்பில் குற்றம்சாட்டப்பட்ட 50க்கும் அதிகமான நபர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டிருக்கிறது.

ஐ.நா பணியாளர்கள் இருவரை கொலை செய்த வழக்கில் 54 நபர்கள் குற்றம் சாட்டப்பட்டனர். இதில் ராணுவ நீதிமன்றம் 50 நபர்களுக்கு மரண தண்டனை விதித்திருக்கிறது. மேலும் இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட ராணுவ கர்னல் ஒருவருக்கு பத்து வருடங்கள் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டிருக்கிறது.

காங்கோ நாட்டில் மரண தண்டனை நிறைவேற்றுவது தடை செய்யப்பட்டிருக்கிறது. இச்சட்டம் நடைமுறையில் இருக்கும் வரை மரண தண்டனை விதிக்கப்பட்ட அனைத்து கைதிகளும் சிறை தண்டனை அனுபவிப்பார்கள் என்று கூறப்பட்டிருக்கிறது. மேலும் இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட 20க்கும் அதிகமானோர் தப்பியோடிவிட்டனர்.

மேலும் பலர் அதிக நாட்களாக வழக்கு விசாரணை நடைபெற்று வருவதால் சிறையிலேயே உயிரிழந்துள்ளனர்.

Categories

Tech |