Categories
உலக செய்திகள்

வழக்கறிஞரை கடித்த நாய்கள்… பிரபல நாட்டில் வினோத தண்டனை… சமூக ஆர்வலர்கள் கண்டனம்..!!

பாகிஸ்தானில் வழக்கறிஞரை கடித்த இரண்டு நாய்களுக்கு மரண தண்டனை வழங்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கராச்சியை சேர்ந்தவரும் மூத்த வழக்கறிஞருமான மிர்சா அக்தர் கடந்த மாதம் நடைபயிற்சிக்காக காலையில் வெளியில் சென்றிருந்தார். அப்போது இரண்டு நாய்கள் சேர்ந்து மிர்சா அக்தரை பயங்கரமாக கடித்துள்ளது. அதில் அவருக்கு பலத்த காயங்கள் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. மேலும் இது தொடர்பாக சமூக வலைத்தளத்தில் வீடியோ ஒன்று வைரலாகப் பரவியது. இந்த சம்பவம் தொடர்பாக செல்லப்பிராணியின் உரிமையாளருக்கும், மிர்சாவுக்கும் இடையே நீதிமன்றத்தில் ஒப்பந்தம் ஒன்று போடப்பட்டுள்ளது.

அதில் அந்த இரண்டு நாய்களும் கால்நடை மருத்துவரால் கருணைக் கொலை செய்யப்பட வேண்டும், அதாவது மரண தண்டனை இரண்டு நாய்களுக்கும் வழங்கப்பட வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. அதோடு மட்டுமில்லாமல் நாய்களின் உரிமையாளர் மிர்சாவுக்கு ஏற்பட்ட காயத்திற்கு மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும், ஆபத்தான நாய்களை தனது வீட்டில் செல்லப்பிராணிகளாக வைத்திருக்க கூடாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஒப்பந்தமானது நீதிமன்றத்தில் வைத்து இருவரின் கையெழுத்திடப்பட்டு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இந்த ஒப்பந்தத்திற்கு சமூக ஆர்வலர்கள் பலரும் தங்களது கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர்.

Categories

Tech |