பாகிஸ்தானில் ஒரு பெண் தன் தோழிக்கு நபிகள் குறித்து அவதூறாக கேலி சித்திரங்களை அனுப்பிய நிலையில் அவருக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தானைச் சேர்ந்த அனிகா அட்டி மற்றும் பாரூக் ஹஸனாத் ஆகிய இரண்டு பெண்களும் நெருங்கிய தோழிகள். இந்நிலையில், இருவருக்குமிடையே சமீபத்தில் பிரச்சனை ஏற்பட்டிருக்கிறது. இதனால் இருவரும் பிரிந்தனர். அதன்பிறகு, அனிகா, பாரூக்கிற்கு வாட்ஸ்அப் மூலமாக நபிகள் நாயகம் குறித்து அவதூறான தகவல்களை அனுப்பியிருக்கிறார்.
எனவே, பாரூக் இந்த செய்திகளை அழித்துவிட்டு மன்னிப்பு கேள் என்று அனிகாவிடம் கூறியிருக்கிறார். ஆனால் அவர் கேட்கவில்லை. இதனைத் தொடர்ந்து, பாரூக், அனிகா மீது மத்திய புலனாய்வு அமைப்பின் சைபர் கிரைம் பிரிவில் புகார் தெரிவித்தார். இந்த வழக்கு தொடர்பான விசாரணை நீதிமன்றத்தில் நடந்து வந்தது.
இந்நிலையில், நபிகள் நாயகம் குறித்து அவதூறாக கேலி சித்திரங்களை வாட்ஸ் அப்பில் அனிகா அனுப்பியது உறுதியானது. எனவே, நீதிமன்றம் அவருக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்திருக்கிறது. மேலும், அவர் மீது இஸ்லாம் மார்க்கத்தை அவமதித்ததாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.