உயிருடன் இருக்கும் பெண்ணிற்கு கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்த ரோஷினி என்ற பெண்ணிற்கும் வீரராகவன் என்பவருக்கும் கடந்த 2018 ஆம் வருடம் திருமணம் நடைபெற்றது. வீரராகவன் குடும்பத்தில் ஏற்பட்ட தகராறினால் கடந்த மார்ச் மாதம் தற்கொலை செய்துகொண்டார். இதனை அடுத்து ரோஷினி தாய் வீட்டிற்கு வந்துவிட்டதால் இரண்டு குடும்பத்திற்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் ரோஷினி வசிக்கும் பகுதியில் கடந்த 7ஆம் தேதி ரோஷினி இறந்து விட்டதாக கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒட்டப்பட்டிருந்தது.
இதனை பார்த்த குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர் இதனை தொடர்ந்து வீரராகவன் குடும்பத்தினர் தான் இந்த செயலை செய்திருக்க வேண்டும் என்றும் இதனை விசாரித்து தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் ரோஷினியின் தந்தை செல்வராஜ் பெரம்பலூர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதனை ஏற்ற காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.