தனியார் நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்த ஊழியர் திடீர் மாரடைப்பு ஏற்பட்டு மர்மமான முறையில் உயிரிழந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
ஈரோடு மாவட்டத்தில் தனியார் பனியன் நிறுவனம் ஒன்றில் மார்க்கெட்டிங் மற்றும் கலெக்சன் பணிகளை செய்து வந்த ஒருவரை நேற்று இரவு நிறுவனத்தில் இருந்த பொழுது திடீரென மாரடைப்பு ஏற்பட்டதாக சக ஊழியர்கள் ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதித்துள்ளனர். மருத்துவமனையில் சிகிச்சை அளித்தும் பலனின்றி பரிதாபமாக அவர் உயிரிழந்துள்ளார். பின்னர் அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக ஈரோடு மருத்துவமனைக்கு ஈரோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இந்நிலையில் இறந்த ஊழியர் அடித்துக் கொல்லப்பட்டிருக்கலாம் என வதந்தி பரப்பப்பட்டு வருகின்றது.. உறவினர்களும் அவரது மரணத்தில் மர்மம் இருப்பதாக கூறியுள்ளனர். இதனைத் தொடர்ந்து ஈரோடு காவல்துறையினர் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.