உலக மக்கள் மகிழ்ச்சி அடையும் விதமாக கொரோனா மரணங்களின் எண்ணிக்கை குறைவடைந்து வருகின்றது
கொரோனா தொற்று மரண சதவிகிதம் உலக அளவில் குறைந்து வருகின்றது. கொரோனாவால் உலக அளவில் பாதிக்கப்பட்டவர்கள் 77,65,000. இதில் மரணமடைந்தவர்கள் எண்ணிக்கை 4,30,000. மரணம் அடைந்தவர்களில் நான்கில் ஒரு பங்காக அமெரிக்காவில் ஒரு லட்சத்திற்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். தொற்றில் இருந்து விடுபட்டு வீட்டிற்கு சென்றவர்களின் எண்ணிக்கை 40,00,000. உடலில் கொரோனா உள்ளவர்கள் அதாவது மருத்துவமனையில் சிகிச்சை எடுத்து வருபவர்களின் எண்ணிக்கை 33,55,000 இவர்களில் 98 சதவீதம் பேர் குறைந்த அளவே அறிகுறிகளுடன் இருக்கின்றனர். மீதம் இரண்டு சதவீதம் பேர் தீவிரமாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
அதிக அளவு உயிரிழப்பை சந்தித்திருக்கும் நாடுகள் என பார்த்தால் அமெரிக்கா முதலிடத்தில் 1,16,850 உயிரிழப்புகளை சந்தித்துள்ளது. பிரேசில் இரண்டாவது இடத்தில் 41,950 உயிரிழப்புகளை சந்தித்துள்ளது. பிரிட்டன் 41500 உயிர் இழப்புகளை சந்தித்து மூன்றாவது இடத்தில் உள்ளது. அதற்கு அடுத்ததாக இத்தாலி 34,250 உயிரிழந்து நான்காவது இடத்தில் உள்ளது. தொற்றிலிருந்து முடிவு தெரிந்தவர்கள் அதாவது மரணமடைந்தவர்கள் மற்றும் குணமடைந்து வீடு திரும்பியவர்கள் எண்ணிக்கை 44,10,000. இதில் 90% குணமடைந்தவர்கள் 10% மரணமடைந்தவர்கள்.
கவனிக்க வேண்டியது கொரோனா தொற்று பரவத் தொடங்கிய காலத்தில் அதாவது இரண்டு மாதங்களுக்கு முன்பு குணமடைந்து அவர்களின் எண்ணிக்கை 78 சதவீதம் மட்டுமே இருந்தது மரணமடைந்தவர்களின் சதவிகிதம் 22 ஆக இருந்தது. ஆனால் தற்போது மரணங்களின் எண்ணிக்கை குறைந்து தற்போது 10 சதவீதத்தில் வந்து நிற்கின்றது. இதனால் குணம் அடைபவர்களின் எண்ணிக்கையும் வரும் காலங்களில் அதிகரிக்கும். எனவே மக்கள் அச்சப்பட வேண்டிய அவசியமில்லை. தம்மைத்தாமே ஜாக்கிரதையாக பாதுகாத்துக் கொண்டால் போதுமானது.