காய்கறி வியாபாரிக்கு கொலை மிரட்டல் விட்ட ஊராட்சி மன்ற தலைவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பி.எஸ். அக்ரஹாரத்தில் காய்கறி வியாபாரியான முருகன் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் இவருக்கும் அதே பகுதியில் வசிக்கும் ஊராட்சி மன்ற தலைவர் முனியப்பன் என்பவருக்கும் ஏற்கனவே முன்விரோதம் இருந்தது தெரியவந்துள்ளது.
இதனையடுத்து முருகன் காய்கறி வியாபாரம் செய்து கொண்டிருந்த நேரத்தில் முனியப்பன், அவரின் தம்பி சின்னபையன் மற்றும் உறவினர் துரை ஆகிய 3 பேரும் அவரை கல்லால் அடித்து கொலை மிரட்டல் விடுத்ததாக தெரியவந்துள்ளது. மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் ஊராட்சி மன்ற தலைவர் முனியப்பன் மற்றும் அவருடன் இருந்த சின்னபையன், துரை உள்ளிட்ட 3 பேரையும் கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.