சென்னை திருவொற்றியூர் கடற்கரையில் அதிக அளவு உயிரிழப்புகள் நிகழ்ந்த பகுதிகளில் எச்சரிக்கை பலகைகளை காவல்துறையினர் நட்டு வருகின்றனர்.
சென்னை திருவெற்றியூர் கடற்கரை சாலையில் உள்ள கேவி குப்பம், ஒண்டிகுப்பம், கடற்கரை பகுதிகளில் அதிக அளவில் உயிரிழப்புகள் ஏற்படுகின்றன. குறிப்பாக பள்ளி, கல்லூரி மாணவர்கள் பலர் ஆபத்தை உணராமல் ஆழமான பகுதிகளுக்கு சென்று குளிப்பதற்கு முன்பு செல்பி எடுப்பது உள்ளிட்ட செயல்களில் ஈடுபடுவதால் உயிரிழப்பு அதிகரித்து வருகிறது.
இதை தொடர்ந்து உயிரிழப்பு அதிகம் நடைபெற்ற இடங்களில் அதனை தடுக்கும் விதமாக எச்சரிக்கை பலகைகளை காவல்துறையினர் நட்டு வருகின்றனர். இந்த செயலுக்கு வண்ணாரப்பேட்டை காவல் தலைமை அதிகாரி சுப்புலட்சுமி தலைமையில் இந்த பணிகள் நடைபெற்றன. காவல்துறையின் இந்த நடவடிக்கைக்கு பொதுமக்கள் சார்பில் பாராட்டுகள் குவிந்து வருகின்றனர்.