Categories
உலக செய்திகள்

சூறாவளி போல் அதிகரிக்கும் உயிரிழப்புகள்… புதிய தடுப்பூசி திட்டம் தேவை… தொற்று நோய் நிபுணர் எச்சரிக்கை…!

அமெரிக்காவில் கொரோனா தொற்றால் ஏற்படும் இறப்புகளை தவிர்க்க வேண்டுமென்றால் தடுப்பூசி திட்டத்தை மாற்ற வேண்டும் என்று தொற்று நோய் நிபுணர் எச்சரித்து உள்ளார்.

அமெரிக்காவின் தொற்று நோய் நிபுணர் மைக்கேல் ஆஸ்டர்ஹோம், பிரிட்டன் தென்னாப்பிரிக்கா மற்றும் பிரேசில் வகை கொரானா வைரஸ் சூறாவளி போல் அதிகரிக்கும் என்று கூறியுள்ளார். இதனை தடுக்க வேண்டுமென்றால் தற்போது செயல்பட்டு வரும் தடுப்பூசித் திட்டத்தில் ஒரு புதிய மாற்றத்தை கொண்டு வர வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது, அமெரிக்காவில் தற்போது தடுப்பூசியின் முதல் டோஸ் போடப்பட்டு வருகிறது. முதல் டோசை எடுத்துக் கொண்டவர்கள் சில வாரங்களுக்குள் இரண்டாவது டோஸ் தடுப்பு ஊசியை எடுத்துக் கொண்டால் தான் அது முழுமையாக வேலை செய்யும். அதற்காக இரண்டாவது டோஸ் தடுப்பு மருந்து சேமிக்க வைக்கப்படுகிறது.

ஆனால் தற்போது கொரோனா பரவல் மிகவும் வேகமாக பரவி வரும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளதால், தடுப்பு மருந்துகளை சேகரித்து வைக்காமல் முதல் டோஸ் எடுத்தவர்களுக்கு இரண்டாவது டோஸ் போடப்படவேண்டும். குறிப்பாக 65 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு விரைவில் தடுப்பூசி செலுத்துவதன் மூலம் வருங்காலங்களில் நிகழவிருக்கும் இறப்பு எண்ணிக்கைகளை குறைக்க இயலும் என்று தெரிவித்துள்ளார்.

Categories

Tech |