உலகளவில் கொரோனோவால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 1,70,423ஆக உயர்ந்துள்ளது.
சீனாவில் இருந்து பரவ தொடங்கிய கொரோனா வைரஸ் உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. உலகம் முழுவதும் கொரோனா நோய்த் தொற்று 210 நாடுகளுக்குப் பரவியுள்ளது. நாளுக்கு நாள் பலி எண்ணிக்கை லட்சக்கணக்கில் அதிகரித்து வருகின்றது. இது மக்களிடத்தில் அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. உலகம் முழுவதும் கொரோனோவால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 1,70,423ஆக உயர்ந்துள்ளது.
உலகளவில் கொரோனோவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 24,81,026ஆக உயர்ந்துள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து 6,46,367 பேர் குணமடைந்துள்ளனர். அதிகபட்சமாக அமெரிக்காவில் 7,92,759 பேர் கொரோனோவால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஸ்பெயின் – 2,00,210, இத்தாலி – 1,81,228, பிரான்ஸ் – 1,55,383, ஜெர்மனி – 1,47,065, இங்கிலாந்து – 1,24,743, துருக்கி – 90,980, ஈரான் – 83,505, சீனா – 82,758 பேர்பாதிக்கப்பட்டுள்ளனர்
அமெரிக்காவில் அதிகபட்சமாக 42,514 பேர் கொரோனா வைரஸால் உயிரிழந்துள்ளனர். இத்தாலியில் – 2,4114, ஸ்பெயினில் 20,852, பிரான்ஸ் – 20,265, இங்கிலாந்து – 16,509 பேர் பேர் பலியாகியுள்ளனர். இதுவரை பிரான்ஸ் நாட்டில் கொரோனா பாதித்து 37 ஆயிரம் பேர் குணமடைந்துள்ளனர்.