தமிழகத்தில் கொரோனா உயிரிழப்பு 6ஆக அதிகரித்துள்ளது என சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் தெரிவித்தார்.
தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இன்று செய்தியாளர்களை சந்தித்த தமிழக சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் தமிழகத்தில் மேலும் 50 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது என்று தெரிவித்தார். 50 பேரில் 48 பேர் டெல்லி மாநாட்டில் பங்கேற்றவர்கள்.இதனால் தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 571இல் இருந்து 621 ஆக அதிகரித்துள்ளது.
கொரோனா உறுதி செய்யப்பட்டு ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த 57 வயது பெண் மூச்சுத்திணறி உயிரிழப்ந்துள்ளர். உயிரிழந்த பெண் திருச்சி சென்று வந்தவர் என கண்டறியப்பட்டுள்ளது என்று சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் தெரிவித்தார்.