இந்தியாவில் கொரோனா வைரசால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 18ஆக அதிகரித்துள்ளது.
உலகையே அச்சுறுத்தி வரும் கொரானா வைரஸ் உலக நாடுகளில் மரணத்தை ஏற்படுத்தி கதிகலங்க வைத்து வருகிறது. கடந்த சில வாரங்களாக இந்தியாவிலும் வேகமாக பரவி வரும் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 724 ஆக உயர்ந்துள்ளது. இதில் கேரளா , மகாராஷ்டிராவில் அதிக பாதிப்பு ஏற்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.மாநிலம் முழுவதும் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை எப்படி அதிகரித்து வருகின்றதோ அதே போல உயிரிழப்புகளும் அதிகரித்து வருகின்றது.
கொரோனா பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த 18 பேர் குணமடைந்துள்ள நிலையில் உயிரிழப்புகள் 18 ஆக அதிகரித்துள்ளது. இதில் கர்நாடக மாநிலத்தில் 3ஆவது உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது மக்களை அச்சத்தில் அதிரவைத்துள்ளது. டெல்லி சென்று கர்நாடகா திரும்பிய 65 வயதான ஒருவர் துமகூருவில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் தற்போது சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இதனால் அங்கு உயிரிழந்தோரின் எண்ணிக்கை 3ஆக அதிகரித்துள்ளது.