Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

உங்க கணவர் இறந்துவிட்டார்…. அடுத்த நிமிடம் உயிரை விட்ட மனைவி…. சோகத்தில் மூழ்கிய உறவினர்கள்….!!

கணவன் இறந்த செய்தியால் மனைவி மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் பெருந்துறை அருகே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஈரோடு மாவட்டத்தில் உள்ள பெருந்துறை பகுதியில் பழனிச்சாமி என்கின்ற மாணிக்கம் வசித்து வந்தார். இவர் விவசாயம் செய்து வந்துள்ளார். இவருக்கு முத்தாயம்மாள் என்ற மனைவியும் 2 மகன்களும் உள்ளனர். இரு மகன்களும் வெளியூரில் வேலை பார்ப்பதால் திருமணம் முடிந்தும் அங்கு வசித்து வருகின்றனர். இதையடுத்து வயதான பழனிச்சாமி, முத்தாயம்மாள் இருவரும் ஓலப்பாளையம் பகுதியில் வசித்து வந்துள்ளனர். இந்நிலையில் கண்ணவேலம் பகுதியில் உள்ள தோட்டத்திற்கு மாணிக்கம் ஒரு வேலையாக சென்றுள்ளார்.

அப்போது எதிர்பாராத விதமாக மாணிக்கம் மயங்கி கீழே விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார். இதனை அடுத்து அங்கு சென்ற சிலர் மாணிக்கம் இறந்ததை அவரது பக்கத்து வீட்டாரான சுப்பிரமணியம் என்பவருக்கு தகவல் அளித்தனர். சுப்பிரமணியம் இதுகுறித்து மாணிக்கத்தின் மனைவி முத்தாயம்மாளிடம் கூறியுள்ளார். அதை கேட்டு கதறி அழுத முத்தாயம்மாள் திடீரென கீழே மயங்கி விழுந்து உயிரிழந்தார். ஒரே நாளில் கணவன் மனைவி இருவரும் உயிரிழந்த சம்பவம் பெருந்துறை அருகே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |