வலிப்பு நோயால் கிணற்றில் தவறி விழுந்து தொழிலாளி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சி மாவட்டத்தில் உள்ள வளநாடு பகுதியில் செல்லையா என்பவர் வசித்து வந்தார். இவருக்கு செல்வம் என்ற ஒரு மகன் இருந்துள்ளார். செல்வம் கல்லுடைக்கும் கூலி தொழில் செய்து வந்தார். இவருக்கு வலிப்பு நோய் இருந்துள்ளது. இதையடுத்து அவர் வளநாடு பகுதியில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார்.
இந்நிலையில் செல்வம் தனது வீட்டில் உள்ள கிணற்றருகே சென்றபோது எதிர்பாராதவிதமாக ஏற்பட்ட வலிப்பு நோயால் கிணற்றில் தவறி விழுந்ததில் அவர் நீரில் மூழ்கி பலியானார். இச்சம்பவம் உறவினர்கள் இடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து தகவலறிந்த வளநாடு காவல்துறையினர் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.