மகளின் திருமணத்திற்காக 1.5 லட்சம் ரூபாயை கடன் வாங்கிவிட்டு அதை செலுத்த முடியாமல் தவித்த நபர் மனைவியின் அக்காவை இதற்குள் சிக்க வைத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஜம்மு-காஷ்மீர் மாநிலம் உதம்பூர் சேர்ந்த சுஹல் என்பவர் தனது மகளின் திருமணத்திற்காக 1.5 லட்சம் ரூபாயை பலரிடம் கடன் வாங்கியுள்ளார். அந்த கடனை திருப்பி செலுத்த முடியாமல் தவித்து வந்துள்ளார். மேலும் மனைவியின் அக்கா ஷனோ இவருக்கும் இடையே பல நாட்களாக சண்டை இருந்து வந்துள்ளது. இந்த பிரச்சினையில் எப்படியாவது மனைவியின் அக்காவை சிக்கி வைத்து விடவேண்டும் என்று திட்டம் போட்டு தான் வாங்கிய கடனை அடைக்காமல் தலைமறைவாகியுள்ளார்.
மேலும் மனைவியின் அக்கா தான் தன்னை கடத்தி விட்டதாக அனைவரையும் நம்ப செய்துள்ளார். இதை எடுத்து போலீசாரிடம் சுஹல் காணாமல் போனதாக புகார் அளித்தனர். பின்னர் விசாரணை செய்த காவல்துறையினர் அவர் தலைமறைவாக இருந்த காட்டிற்குள் சென்று அவரை கைது செய்தனர். இதையடுத்து அவர் காவல்துறையுடன் உண்மையை ஒப்புக் கொண்டார்.