Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

கழுத்தை இறுக்கிய கடன்….. 3 வயது மகளை…. நீரில் மூழ்கடித்து கொன்ற தந்தை….. குமரி அருகே சோகம்…!!

கன்னியாகுமரி அருகே கடன் தொல்லை கழுத்தை  இறுக்கியதால் மகளை தந்தையே கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம் அஞ்சுகிராமம் பகுதியை அடுத்த மயிலாடு மார்த்தாண்டத்தை  சேர்ந்தவர் செந்தில்குமார். இவரது மனைவி லட்சுமி. இவர்கள் இருவருக்கும் ஸ்ரீகாந்த் என்ற மகனும் சஞ்சனா என்ற 3 வயது  பெண் குழந்தையும் உள்ளது. இந்நிலையில் ஸ்ரீகாந்த் அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் இரண்டாம் வகுப்பு படித்து வர சஞ்சனா எல்கேஜி படித்து வருகிறார்.

செந்தில்குமார் தொழில் செய்வதாக கூறி ஊரை சுற்றி பல லட்சக் கணக்கில் கடன் வாங்கி பின் அவற்றை அடைப்பதற்காக மனைவியின் நகையை அடமானம் வைத்துள்ளார். இதையடுத்து  திருமண நிகழ்வு ஒன்றுக்கு செல்ல நகையை மீட்டு தருமாறு மனைவி சண்டையிட இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. பின் மனைவி அவர் கோபித்துக் கொண்டு வெளியில் சென்று பின் மீண்டும் வீட்டிற்கு திரும்பி வந்து பார்த்தபோது மகன் மயங்கி நிலையிலும்,

மகள் தண்ணீர் தொட்டிக்குள் இறந்தும் கிடந்துள்ளார். பின் காவல்நிலையத்தில் தகவல்  தெரிவிக்கப்பட சம்பவ இடத்திற்கு விரைந்த அவர்கள் இறந்த குழந்தையின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். சிறுவனை அரசு மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளித்து வருகின்றனர். பின் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட அதிகாரிகள் கீழமேடு பகுதியில் தலைமறைவாகி இருந்த செந்தில்குமாரை கைது செய்து விசாரித்ததில் பரபரப்பு வாக்குமூலம் ஒன்றை அளித்துள்ளார்.அதில்,

ஊரைச்சுற்றி கடன் வாங்கியதால் அவற்றை கட்ட முடியாத வேதனையில் தற்கொலை செய்யும் முடிவுக்கு வந்தேன்.  நான் தற்கொலை செய்து கொண்டால் எனது மகனும், மகளும் அனாதையாகிவிடுவார்களோ என்ற அச்சத்தில் முதலில் மகனைக் கொல்ல திட்டமிட்டு,

அவனை அழைத்து கயிறுகளால் கழுத்தை இறுக்கி மயங்கியதும் இறந்துவிட்டதாக நினைத்து மகளை கொலை செய்ய உள்ளே சென்றேன். அப்போது வீட்டில் மனைவியுடன் தகராறு ஏற்பட்டது. பின் அவர் வெளியே சென்ற நேரத்தில் மகளையும் தண்ணீர் தொட்டியில் மூழ்கடித்து கொன்று காரில் ஏறி தப்பி விட்டேன் என்று தெரிவித்தார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |